Saturday, 11 January 2014

வாழ்க்கையின் தத்துப்பிள்ளை




 'வாழ்க்கை ஏன் இப்படி என்னை
ஆட்டிப் படைக்கிறது?'
ஆட்டிப் படைக்கவில்லை;
ஆக வேண்டிய காரியத்தை முடிக்க ஆள் எடுக்கிறது.

'வாழ்க்கை என்னை மட்டும் ஏன் இப்படி
வாட்டி வதைக்கிறது?'
வாட்டி வதைக்கவில்லை;
வந்த வேலை முடிக்க வாய்ப்பு கொடுக்கிறது.

இப்பொழுதே
ஆட்டிப்படைக்கிறது, வாட்டி வதைக்கிறது என்றால் எப்படி?
ஒத்துவருவாயா மாட்டாயா என்று பார்க்க
ஒத்திகைதான் நடக்கிறது
எல்லையைத் தொட இன்னும்
எவ்வளவோ இருக்கிறது.

வாழ்க்கை உன்னை தத்தளிக்க விடுவதாக
தவறாக புரிந்து கொள்ளாதே!
தான் தத்தெடுத்தப் பிள்ளையை அது தயார்படுத்துகிறது!

தீக்குச்சியைப் பார்!
பற்றி எரிகிறோமே என்று
பயப்படுகிறதா? இல்லை பதற்றப்படுகிறதா?
பயனை அடைகிறோமே என்றுதான்
பரவசப்படுகிறது.

ஒவ்வொரு அழிவுக்குப் பின்னும் ஒரு ஆரம்பமுண்டு;
ஒவ்வொரு அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமுண்டு.

நீ நமத்துப்போன குச்சியாக இருந்திருந்தால்
வாழ்க்கை உன்னை ஏறிட்டும் பார்த்திருக்காது;
நீ நல்ல குச்சியாக இருப்பதால்தான்
அது உன்னை ஏற்றிவைக்கப் பார்க்கிறது.

காலமெனும் கடலில் துணிந்து இறங்கு!
வாழ்க்கைப் படகில் று!
இலட்சிய நாண் ற்று!
பிறவிப் பயன்ய்து!

No comments:

Post a Comment